×

சூப்பர் ஜயன்ட்சுடன் இன்று சன்ரைசர்ஸ் பலப்பரீட்சை

ஐதராபாத்: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 57வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலின் டாப் 5ல் இருந்தாலும், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றிகளைக் குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளன. கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் 11 ஆட்டங்களில் 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. மும்பையிடம் நேற்று முன்தினம் தோல்வியை சந்தித்த நிலையில், ஒரு நாள் இடைவெளியில் இன்று லக்னோவை எதிர்கொள்கிறது. லக்னோ அணியுடன் இதுவரை மோதிய 3 ஆட்டங்களிலும் ஐதராபாத் தோல்வியைதான் சந்தித்துள்ளது.

கடைசி 3 லீக் ஆட்டங்களையும் சொந்த மைதானத்தில் விளையாட உள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு சாதகமாக இருக்கும். அதே சமயம், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் சம பலத்துடன் வெற்றிக்காக வரிந்துகட்டுகிறது. அந்த அணியும் 11 ஆட்டங்களில் 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் உள்ளது. 3வது இடத்துக்கு முன்னேறும் முனைப்புடன் இரு அணிகளும் மல்லுக்கட்டுவதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

* இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளதில், லக்னோ 3-0 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
* இந்த 3 ஆட்டங்களும் மும்பை, லக்னோ, ஐதராபாத் என 3 வெவ்வேறு நகரங்களில் நடந்துள்ளன.
* அதிகபட்சமாக லக்னோ 185, ஐதராபாத் 182 ரன் விளாசியுள்ளன. குறைந்தபட்சமாக லக்னோ 127, ஐதராபாத் 121 ரன் எடுத்துள்ளன.

The post சூப்பர் ஜயன்ட்சுடன் இன்று சன்ரைசர்ஸ் பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : Sunrisers ,Super Giants ,Hyderabad ,Lucknow Super Giants ,IPL ,Dinakaran ,
× RELATED 3 ஆண்டுக்கு பின் பிளே ஆப் சுற்றில் கால்பதித்து சன்ரைசர்ஸ் சாதனை